Published Date: April 1, 2024
CATEGORY: CONSTITUENCY
அரசு பள்ளிகளில் மேம்பாட்டிற்காக இரண்டு கோடி ரூபாய் வழங்கிய பெரியவர் ராஜேந்திரனுக்கு விருதினை தகவல் தொழில் நட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் "இங்க வர்றதுக்கு முக்கியமான இரண்டு காரணங்கள். இதுக்கு முன்னாடி விருது வாங்கிய சாலமன் பாப்பையா என் தொகுதி வாக்காளர். அதே மாதிரி ராஜேந்திரன் அவர்கள் என் தொகுதி அரசு பள்ளிகளுக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்காரு. இந்த இரண்டு பேருக்குமே விருது வழங்கியது ரொம்ப மகிழ்ச்சி! "
என்றவரிடம், "ஒரு கோடி ரூபாய் செலவில் கோவில்பட்டியில் அரசு பள்ளியில் வேலை நடந்துகிட்டிருக்கு. அதையும் நீங்க தான் திறந்து வைக்கணும் "என்று கோரிக்கை வைத்தார் ராஜேந்திரன். அரசுப்பள்ளி மாணவர்கள் மேடையேறி பெரியவர் ராஜேந்திரனின் ஓவியத்தை கொடுத்தது நெகிழ்ச்சி தருணமாய் அமைந்தது. இருவருக்கும் மினிஸ்டர் வொயிட் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
Media: Anandhavikatan